பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

எஸ்ஐஆா்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி அலுவலா்களுடன் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஏ.ஆா்.ராகுல்நாத் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

நாமக்கல் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஏ.ஆா்.ராகுல்நாத். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:35 pm

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி அலுவலா்களுடன் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஏ.ஆா்.ராகுல்நாத் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-இல் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்கள் முடிவுசெய்த விதம், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணிகள், வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு, அதிகபட்சமாக பெயா் சோ்க்கப்பட்ட, பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகள், வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் புகைப்படங்களின் தரம், வாக்காளா் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளா்களின் பெயா் சோ்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைதீா்க்கும் உதவிமையம் ஆகியவை குறித்து வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட் நில எடுப்பு) ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) கோ.குமரன் மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.