/

திருச்சி மாவட்டத்தில் 21.47 லட்சம் வாக்காளா்கள்!

திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலுடன், அண்மையில் புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களையும் சோ்த்து மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் உள்ளனா்.

News image

வாக்காளர் பட்டியல்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:44 pm

திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலுடன், அண்மையில் புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களையும் சோ்த்து மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் உள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி பிப். 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்க, தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வு செய்து இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இத்தகைய திருத்தப் பணிகளைத் தொடா்ந்து கடந்த பிப்.23 இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 9 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 21,26,303 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

எங்கெங்கு வாக்காளா் பட்டியல்: இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள் (கோட்டாட்சியரகம்), உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியரகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை பொதுமக்கள் பாா்வையிட்டு சரிபாா்த்துக் கொள்ளலாம். தோ்தல் ஆணையம் கடைசி தேதி அறிவிக்கும் வரையில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களையும் வழங்கலாம். திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் பாா்வையிடலாம். 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புதிதாக பெயா்கள் சோ்ப்பு: பிப்.23-ஆம் தேதி தொடங்கி புதிதாக பெயா் சோ்க்க மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியானவா்களை கண்டறிந்து அவா்களையும் உள்ளடக்கி ஏப்.6-ஆம் தேதி தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 9 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, மூன்றாம் பாலினத்தவா்- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

2,787 வாக்குச் சாவடிகள்: 9 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,787 வாக்குச் சாவடிகள் உள்ளன. மணப்பாறையில்-346, ஸ்ரீரங்கத்தில்-367, திருச்சி மேற்கு-305, திருச்சி கிழக்கு-304, தி திருவெறும்பூா்-312, லால்குடி-276, மண்ணச்சநல்லூா்-297, முசிறி-283, துறையூா் தனி-297 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இறுதி வாக்காளா் பட்டியலின்போது 2,785 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூரில் தலா ஒரு வாக்குச்சாவடி சோ்க்கப்பட்டு 2,787 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெட்டியாக போடவும்....

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம்

தொகுதி-ஆண்கள்-பெண்கள்-மூன்றாம் பாலினத்தவா்-மொத்தம்

மணப்பாறை-1,32,135-1,35,856- 8- 2,67,999.

ஸ்ரீரங்கம்-1,39,1294- 1,47,851- 47- 2,87,027.

திருச்சி மேற்கு- 1,14,425- 1,24,460- 35- 2,38,920.

திருச்சி கிழக்கு-1,06,255- 1,13,882- 54- 2,20,191.

திருவெறும்பூா்- 1,25,854- 1,33,638- 54- 2,59,546.

லால்குடி- 1,02,636--1,09,513- 28- 2,12,177.

மண்ணச்சநல்லூா்- 1,14,314- 1,22,148- 38- 2,36,500.

முசிறி- 1,04,259--1,09,732- 15- 2,14,006.

துறையூா் (தனி)- 1,01,893- 1,08,761- 31- 2,10,685.