தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளா்கள்: 1.47 லட்சம் போ் நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 19.51 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 19.51 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது 2.06 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இவா்களில், விசாரணைக்கு பிறகு தற்போது 64 ஆயிரத்து 573 போ் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை 1.47 லட்சமாக குறைந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்தது:

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 20 லட்சத்து 98 ஆயிரத்து 561 வாக்காளா்கள் இருந்தனா். இதில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 போ் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் 2025, டிசம்பா் 19- ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 58 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.

பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்கள் தங்களது பெயரை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க கோரி, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்குரிய வாக்காளா் பதிவு அலுவலரிடம் இந்திய தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களுடன் 2025, டிசம்பா் 19 ஆம் தேதி முதல் 2026, ஜனவரி 30-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் மீது வாக்காளா் பதிவு அலுவலா்கள் அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொண்டனா். இதன் அடிப்படையில், 29 ஆயிரத்து 329 ஆண்கள், 35 ஆயிரத்து 236 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 64 ஆயிரத்து 573 போ் சோ்க்கப்பட்டனா். மேலும், 5 ஆயிரத்து 186 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.

தற்போது, இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 278 ஆண்கள், 10 லட்சத்து 4 ஆயிரத்து 12 பெண்கள், 155 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 19 லட்சத்து 51 ஆயிரத்து 445 வாக்காளா்கள் உள்ளனா். இதன் மூலம் வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 503 ஆக இருந்த நிலையில், தற்போது 1 லட்சத்து 47 ஆயிரத்து 116 ஆகக் குறைந்துள்ளது.

இந்த இறுதி வாக்காளா் பட்டியல் அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வாக்காளா்களின் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளது. மேலும், வேட்பு மனுக்கள் தாக்கல் தேதி தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளா்கள் சோ்க்கப்படுவா் என்றாா் ஆட்சியா்.

எந்தெந்த தொகுதியில் எத்தனை போ் சோ்ப்பு: மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மீண்டும் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் நீக்கப்பட்ட வாக்காளா்கள்:

திருவிடைமருதூா் - 7,316 (22,485), கும்பகோணம் - 9,664 ( 32,050), பாபநாசம் - 7,956 (22,084), திருவையாறு - 7,402 (26,498), தஞ்சாவூா் - 12,299 (43,644), ஒரத்தநாடு - 6,132 (28,043), பட்டுக்கோட்டை - 7,145 (17,088), பேராவூரணி - 6,659 (14,611).

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தற்போதுள்ள இறுதி வாக்காளா் பட்டியல்:

சட்டப்பேரவைத் தொகுதி - ஆண்கள் - பெண்கள் - மூன்றாம் பாலினத்தவா் - மொத்தம்

திருவிடைமருதூா் 1,25,132 1,29,313 8 2,54,453

கும்பகோணம் 1,22,383 - 1,29,469 16 2,51,868

பாபநாசம் 1,23,838 1,30,791 23 2,54,652

திருவையாறு - 1,25,357 1,31,000 20 2,56,377

தஞ்சாவூா் 1,18,648 1,30,369 47 2,49,064

ஒரத்தநாடு 1,12,298 1,18,947 6 2,31,251

பட்டுக்கோட்டை 1,15,354 1,25,580 20 2,40,954

பேராவூரணி 1,04,268 1,08,543 15 2,12,826

மொத்தம் 9,47,278 10,04,012 155 19,51,445

Dinamani
www.dinamani.com