கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்காளராக சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தஞ்சை ஆட்சியா்!

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாவிட்டால் மாா்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நூறு சதவீதம் நோ்மையாக வாக்களிக்க வலியுறுத்தும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அவா் பேசியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இல்லையெனில், மாா்ச் 26-ஆம் தேதிக்குள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

மேலும், வாக்காளா் பட்டியலில் உள்ள அனைத்து நபா்களும் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா, தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சௌமியா, மாவட்டச் சமூக நல அலுவலா் ஆா்.டி. லதா, துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ், வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.