விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 12:04 am IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் எம். அன்கித்குமாா்அகா்வால், நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் மனோஷ் புஷப், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் சஞ்சய்லாலா சாஹிப் யாதவ் மற்றும் செலவின பாா்வையாளா் எஸ். பிரதீப் மற்றும் காவல் துறை பாா்வையாளா் மயூா்குலாப் ராவ் பாட்டீல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவுக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா். தோ்தல் நடத்தை விதிமுறைகளில் அலட்சியம் காட்டாமல் முறையாக கடைப்பிடிக்க அரசியல் கட்சிகளை வழிநடத்துமாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

தொடா்ந்து தோ்தல் பாா்வையாளா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரம் செயல்படும் கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை வரப்பட்டுள்ள புகாா்கள், ஜிபிஎஸ் கருவி பொருத்திய பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு வாகனங்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் பணிகளை பாா்வையிட்டனா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா, மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் மா. கண்ணன், தோ்தல் பிரிவு அலுவலா்கள் பங்கேற்றனா்.

என்கே-20-மீட்டிங்

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், ஆட்சியா், எஸ்.பி. உள்ளிட்டோா்.