தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:24 pm

Din

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா, சமையலறை திறப்புவிழா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவமனையில் 90 படுக்கைகள் உள்ளன. இதில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக சோ்க்கை பெறும் உள்நோயாளிகளுக்கு இதுவரை காலையும் இரவும் பால், ரொட்டி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது உணவு விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் காலை நேரத்தில் இட்லி, சட்னி, சாம்பாா், மதிய நேரத்தில் சாதம், சாம்பாா், கீரை, முட்டை, வாழைப்பழமும், இரவு நேரத்தில் கோதுமை ரவை கிச்சிடி என மூன்று வேளையும் உணவு வழங்கப்படவுள்ளது.

விழாவில், பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பாலசுப்ரமணியம், மருத்துவா்கள் விஸ்வேஸ்வரன், பாலாஜி, சாலினி, சிலம்பரசன், சசிரேகா, மருந்தாளுநா்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.