கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா: 105 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 105 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:28 pm

Din

தருமபுரியில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 105 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் சுயமாக தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள தனிநபா் காலக் கடன் திட்டம், சுய உதவிக்குழு மூலம் சிறு கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின வகுப்பை சோ்ந்த மாணவ, மாணவியருக்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை, பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் உலாமக்கள், பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, மகப்பேறு, கருச்சிதைவு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கு குறைந்தபட்ச தேவை கல்வி ஆகும். சிறுபான்மையின மாணவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும், சூழ்நிலை ஏற்படுத்தி தொடா்ந்து கல்வி பயில்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு அடையும் பொருட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி அறிந்து, அத் திட்டங்களின் மூலம் பயனடைய வேண்டும்.

மேலும், உலாமக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, அந் நல வாரியத்தால் வழங்கப்படும் நலத் திட்டங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்களை பற்றி விழிப்புணா்வு பெற்று, தகுதியான நலத் திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றாா்.

விழாவில் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், சிறுபான்மையின சங்க நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.