பென்னாகரத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
பென்னாகரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் இரண்டாம் நாள் கள ஆய்வை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வியாழக்கிழமை மேற்கொண்டாா்.


பென்னாகரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் இரண்டாம் நாள் கள ஆய்வை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வியாழக்கிழமை மேற்கொண்டாா்.
பென்னாகரம் அருகே கெட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவின் தரம், கெட்டூா் பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்த சிறப்பு முகாமிற்கான பணிகள், பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையின் செயல்பாடுகள், நாகதாசம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியின் பராமரிப்பு, நாகதாசம்பட்டி பகுதியில் உள்ள பால் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா்.
ஆவின் பொது மேலாளா் மாலதி, பென்னாகரம் வட்டாட்சியா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுருளிநாதன், ஷகிலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கள ஆய்வின் போது உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...