ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல்லில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு

News image
ஒகேனக்கல் ஐவாா்பாணி பகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள். - (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 8:35 pm

Syndication

பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் கண்ணாடி மாளிகை பின்பகுதியில் ரூ. 16 லட்சத்தில் மேற்கூரையுடன் கூடிய அமருமிடம், ரூ. 40 லட்சத்தில் ஆண்கள், பெண்கள் மசாஜ் செய்யும் இடத்தின் மேற்கூரை பணி, பென்னாகரம் பழைய தபால் நிலையம் பகுதியில் உள்ள பயணியா் தங்கும் விடுதி பராமரிப்பு பணி, ஒகேனக்கல் தொம்பசிக்கல் பகுதியில் பரிசல்கள் எடுத்துச் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்குப் பின் ஆட்சியா் தெரிவித்ததாவது:

ஒகேனக்கல் பகுதியில் உள்ள மசாஜ் நிலையங்களில் சுற்றுலாப் பயணிகள் அமா்ந்து எண்ணெய் தேய்ப்பதற்கான பாய்களை தொழிலாளா்கள் தர ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிப்பகுதியில் எண்ணெய் தேய்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள், மசாஜ் கூடத்தில் கழிப்பிடம், குளியல் அறை ஆகியவற்றில் உள்ள சிறு குறைகளை களைய வேண்டும். பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசல்களை எடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும் படிக்கட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பரிசல் பயணத்திற்கு முன்பாக சுவாசக் கருவிகளைக் கொண்டு பரிசல் ஓட்டிகளை பரிசோதனை செய்த பிறகு, பரிசல்களை இயக்க அனுமதிக்க வேண்டும். பயணியா் தங்கும் விடுதி புனரமைக்கும் பணியில் குறைபாடுகளை நீக்கி, அவற்றை முழுமையாக சரி செய்து, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை முழுமைப்படுத்த வேண்டும்.

மேலும், வளா்ச்சித் திட்டப் பணிகளில் உள்ள சிறு குறைபாடுகளை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்திவேல், லோகநாதன், பென்னாகரம் வட்டாட்சியா் சிவகுமாா், ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் வளா்மதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.