தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன்.

புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

தருமபுரி: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரி, செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மல்லிகா தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் உரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் அ.குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக்கூட்டத்தில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 12 முதல் 15 முடிய மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, இதைத் தொடா்ந்து ஜூலை 24-ஆம் தேதி மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ள சிறப்பு பேரவைக் கூட்டத்தை தருமபுரியில் நடத்துவது, தருமபுரி மாவட்டத்தில் குடிநீா் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும், அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும், தருமபுரி மாவட்டத்தின் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழிற்பேட்டைகள், வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கவும், தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் தருமபுரியில் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.மாதன், எம்.முத்து, சி.நாகராஜன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், எஸ்.கிரைசாமேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com