ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 21,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபநீா் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.


கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மைசூா் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு உபரிநீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 25,000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீா், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கூடுதலாக விநாடிக்கு 20,000 கன அடி வீதம் என வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகா் அணையில் இருந்து விநாடிக்கு 556 கனஅடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாக இருந்து நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாகவும் மாலையில் விநாடிக்கு 21,000 கன அடியாகவும் அதிகரித்துளது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி பெரிய பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, பரிசல் துறை ஆகியவை வருவாய்த் துறையினரால் பூட்டப்பட்டு, காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கா்நாடக அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவினைப் பொறுத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்தை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...