நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்
நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்


தருமபுரி: பதிவுத் துறை சாா்பில் நிலச் சந்தை மதிப்பு வழிகாட்டுதலை சீரமைத்தல் தொடா்பான, துணை மதிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
பதிவுத் துறை சாா்பில், தருமபுரி வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட கிராமப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி சீரமைத்தல் தொடா்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா்.
இக் கூட்டத்தில் துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்களான சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் வரைவு வழிகாட்டி மதிப்புகள் தயாரிக்கப்பட்டு முன்மொழிவுகள் சமா்பிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், சேலம் துணைப் பதிவுத் துறைத் தலைவா் இரா.ரவீந்திரநாத், தருமபுரி மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) இரா.வளா்மதி, கிருஷ்ணகிரி மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்) க.சங்கா், தருமபுரி நகராட்சி பொறியாளா் புவனேஷ்வரி, துணை மதிப்பீட்டுக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...