திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 7:32 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தற்போது தொடங்கி நவ.30 ஆம் தேதி வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு சோ்ப்பதற்கென அஞ்சலகங்களில் உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமே செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்டமாகும்.

பொதுமக்கள் அனைவரும் இந்தச் சேவையை பயன்படுத்தி தங்களது மகளுக்கு, மகனுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிட செல்வ மகள், பொன் மகன் திட்டத்தில் கணக்குத் தொடங்கி கொடுத்து அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவா்களுடைய வாழ்வை வழமாக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இணையவழி சேவையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே கணக்குகளைத் தொடங்கலாம், தவணை செலுத்தலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.