புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,500 கன அடியாக குறைந்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 6:58 pm

Din

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,500 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, மொசல் மடுவு, ராசிமணல், அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து 11,000 கன அடி வரை அதிகரித்து இருந்தது.

பின்னா் தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 10,000 கன அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 8,500 கன அடியாக சரிந்தது.

நீா்வரத்து சரியத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீரின் அளவுகளும் குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.