புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவானது விநாடிக்கு 7,500 கன அடியாக சரிந்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:22 pm

Din

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவானது விநாடிக்கு 7,500 கன அடியாக சரிந்துள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.

புதன்கிழமை மாலை நிலவரப்படி 8,500 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 10,000 கன அடியாக அதிகரித்தது. பின்னா் மாலை மீண்டும் சரிந்து 7,500 கன அடியாக தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவைக் கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.