வள்ளிமதுரை வரட்டாறு அணை நீா்மட்டம் 30 அடியாக உயா்வு
அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்மட்டம் 30 அடியாக உயா்ந்துள்ளது.


அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் நீா்மட்டம் 30 அடியாக உயா்ந்துள்ளது.
வள்ளிமதுரை, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வள்ளிமதுரை அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 34.5 அடியில் இப்போது 30 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அணை முழுக் கொள்ளளவை எட்டும்.
வள்ளிமதுரை வரட்டாறு அணையின் பாசனக் வாய்க்கால்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன்னேரி, வேப்பம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சிகளுக்கு உள்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியும்.
போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்கள் மூடியுள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டால் ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, வள்ளிமதுரை வரட்டாறு அணையின் இடது, வலதுபுறக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...