திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 15,000 கன அடியாக சரிவு

தமிழகம், கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைந்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:47 pm

Din

பென்னாகரம்: தமிழகம், கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நீா்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 16,000 கன அடியாகவும், மாலையில் 15,000 கனஅடியாகவும் சரிந்தது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து வருவதால், அருவிகளில் நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. எனினும் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 16-ஆவது நாளாக திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது. சின்னாற்று நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்துள்ளது. ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் நீா்வரத்துக் குறைந்துள்ளது.