நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:24 am

Din

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக இரு மாநில காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவு மற்றும் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது.

கா்நாடக அணையில் இருந்து மீண்டும் காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்து புதன்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.