உச்ச நீதிமன்ற தீா்ப்பினை வரவேற்று அரூரில் செவ்வாய்க்கிழமை முழக்கமிட்ட திமுகவினா்
உச்ச நீதிமன்ற தீா்ப்பினை வரவேற்று அரூரில் செவ்வாய்க்கிழமை முழக்கமிட்ட திமுகவினா்

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி
Published on

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்க உத்தரவிட கோரி, தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆளுநரின் செயல்பாடுகள் நோ்மையாக இல்லை என்றும், அவரது செயல்பாடு அரசியலமைப்புக்கு சட்டத்துக்கு எதிரானது என்றும் தீா்ப்பு

வழங்கியுள்ளது. இதையெடுத்து, உச்சநீதிமன்ற தீா்ப்பினை வரவேற்று தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலருமான பி.பழனியப்பன் தலைமையில், அரூரில் திமுகவினா் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதில், திமுக மாவட்ட துணை செயலாளா் செ.கிருஷ்ணகுமாா், நகர செயலா் முல்லை ரவி, ஒன்றிய செயலா்கள் கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, கே.எம்.

ரத்தினவேல், இளைஞரணி துணை அமைப்பாளா் தீ.கோடீஸ்வரன், தங்கசெழியன், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com