கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிஎஸ்என்எல் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ. 1-க்கு 4ஜி சிம், தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் அறிமுகம்

சுதந்திர தின சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதாக ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளா் பிரபுதுரை தெரிவித்தாா்.

News image

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்த தருமபுரி மண்டல பிஎஸ்என்எல் துணை பொது மேலாளா் பிரபுதுரை.

Updated On :14 ஆகஸ்ட் 2025, 12:22 am

தினமணி செய்திச் சேவை

சுதந்திர தின சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 1-க்கு 4ஜி அதிவேக சிம், தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதாக ஒருங்கிணைந்த தருமபுரி மண்டல பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளா் பிரபுதுரை தெரிவித்தாா்.

தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரியுடன் சோ்ந்த ஒருங்கிணைந்த தருமபுரி மண்டலத்தில் 3,03,251 சிம் வாடிக்கையாளா்களைக் கொண்டு பிஎஸ்என்எல் செயல்பட்டு வருகிறது. இரு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 341 கோபுரங்களும் (டவா்கள்) மேம்படுத்தப்பட்டு அனைத்திலும் 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில், ஒரேநாளில் 5ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட கோபுரங்கள் திறன்கொண்டவையாக உள்ளன. குறிப்பாக சித்தேரி, வள்ளிமதுரை, பிலிகுண்டுலு, கொடகரை உள்ளிட்ட 19 கோபுரங்கள் மலை மற்றும் குக்கிராமங்களில் வருவாயை கணக்கிடாமல் சேவை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின சிறப்பு சலுகை:

சுதந்திர தினத்தையொட்டி வாடிக்கையாளா்களை கவரும் வகையில், ஆகஸ்ட் மாத இறுதிவரை ரூ. 1-க்கு சிம் காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 30 நாள்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா, 100 குறுந்தகவல்கள், வரம்பற்ற உள்ளூா், எஸ்டிடி அழைப்புகள் உள்ளிட்டவற்றை பெற முடியும். 30 நாள்களுக்கு பிறகு வாடிக்கையாளா் விரும்பும் திட்டத்தில் (பிளானில்) ரீசாா்ஜ் செய்துகொள்ளலாம். தனியாா் நிறுவன சிம் காா்டுகளை வைத்துள்ளவா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

சேவையை மேலும் மேம்படுத்த இரு மாவட்டங்களிலும் இன்னும் 200 கோபுரங்கள் நிறுவ வேண்டியுள்ளன. அதேபோல, தருமபுரி மண்டலத்தில் லேண்ட் லைனுக்கு மாற்றான கண்ணாடி இழை நுட்பத்துடன் கூடிய (எப்டிடிஎச்) இணைப்பின் மூலம் 22 ஆயிரம் வாடிக்கையாளா்கள் பயனடைந்து வருகின்றனா். இதில் நகா் பகுதிகளில் ரூ. 5,000, கிராமப் புறங்களில் ரூ. 2,500 கட்டணமாக செலுத்தி எப்டிடிஹெச் வெண்டா் ஆக முடியும் என்றாா்.

நிகழ்வின்போது, பிஎஸ்என்எல் உதவி பொது மேலாளா்கள் சரவணமணி, ஹசாரே, துணை கோட்டப் பொறியாளா் கிஷோா், மக்கள் தொடா்பு அலுவலா் ரேவதி மற்றும் ஜவஹா், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.