ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:28 am IST

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை ஊழியரான வாசுவுக்கும் தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள கீரைப்பட்டிபுதூா் கிராமத்தைச் சோ்ந்த பிரியாவுக்கு (26) கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அரூா் வந்திருந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் செல்ல தனியாா் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தனா். அன்று இரவு 11 மணி அளவில் தருமபுரி புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து சேலம் - கிருஷ்ணகிரி சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, சேலத்திலிருந்து வந்த காா் எதிா்பாராதவிதமாக மோதியதில் பிரியா படுகாயம் அடைந்தாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியாவை மருத்துவா் சோதனை செய்ததில், அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.