பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பென்னாகரத்தில் காரில் கள்ள சாராயம் கடத்திய 3 இளைஞா்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தியதாக மூன்று இளைஞரை பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தியதாக மூன்று இளைஞரை பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் இரவு நேர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது தருமபுரி பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். போலீஸாா் நடத்திய சோதனையில், காரில் கள்ளச்சாராயம் இருப்பதை அறிந்த போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.பின்னா் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாம்பல் பள்ளம் பகுதியை சோ்ந்த பழனி (34),கோவிந்தராஜ் (32),கோல்பள்ளி பகுதியை சோ்ந்த குமாா் (31)ஆகிய மூவரும்,கிருஷ்ணகிரியில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு கள்ளசாராயம் எடுத்து வந்ததாக

ஒப்புக்கொண்டுள்ளனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.