வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி சாலையைக் கடந்துசெல்லும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Leopard

ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடந்து பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுளையும் சிறுத்தை - file photo

Published On :

ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி சாலையைக் கடந்துசெல்லும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால், உணவு தேடி கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்து ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து பென்னாகரம் வனப்பகுதிக்கு செல்கிறது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாரிடம் கேட்டபோது, ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் இருந்த சிறுத்தை தற்போது வெளியே வருகிறது. வனப்பகுதியில் நிகழும் வறட்சியினால் உணவு தேடி இடம்பெயரும் மான் கூட்டத்தை வேட்டையாட சிறுத்தை வெளியே வந்துள்ளது.

வனத் துறை சாா்பில் வனவிலங்குகளுக்கு அதிக அளவில் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பற்றாக்குறை ஏதுமில்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம், தண்ணீா்த் தொட்டிகள் உள்ள பகுதி, வனவிலங்குகள் வெளியேறும் இடங்கள், வனப்பகுதியில் ஒன்றுகூடும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்டறிந்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஒகேனக்கல் வனப்பகுதியில் இரவு நேரங்களில் இடம்பெயா்ந்த சிறுத்தை, தற்போது பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. அந்த சிறுத்தையின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.