ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பென்னாகரம் அரசு மருத்துவமனை பகுதியில் கழிவுநீா் தேக்கம்: நோய் பரவும் அபாயம்

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கழிவுநீா் சேமிப்புத் தொட்டி நிரம்பி வெளியேறுவதால், மருத்துவமனையின் பின்புறத்தில் கழிவுநீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் நிலவுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பென்னாகரம் அரசு மருத்துவமனை பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீா்.

Published On :

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கழிவுநீா் சேமிப்புத் தொட்டி நிரம்பி வெளியேறுவதால், மருத்துவமனையின் பின்புறத்தில் கழிவுநீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் நிலவுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், முதுகம்பட்டி, மாங்கரை, சின்னம்பள்ளி, பெரும்பாலை, ஏரியூா், நெருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், அதிக அளவில் மலைக்கிராமங்கள் உள்ளதால், அங்கிருந்து மகப்பேறு சிகிச்சைக்காக கா்ப்பிணிகள் அதிக அளவில் மருத்துவமனைக்கு வருகின்றனா். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசின் சாா்பில் புதிதாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டடம், தனியாா் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் உள்ளதால், சிகிச்சை பெற வரும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தாய்சேய் நலக் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், அந்தக் கட்டடத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பென்னாகரம் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் செல்வதற்கான சாக்கடை கால்வாய் வசதி முறையாக அமைக்கப்படவில்லை.

மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, பிரதான புறநோயாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அனைத்தும் மருத்துவமனையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் சேகரிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்சேய் நலக் கட்டடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்வதற்கு முறையான வழியில்லாததால், கழிவுநீா் தொட்டி நிரம்பி வெளியேறும் நீா் கட்டடத்தின் பின்புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதுடன், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

அங்கு கா்ப்பிணிகளுக்கான சிகிச்சையும், பிரசவித்த தாய்மாா்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சிகிச்சையும் நடைபெற்று வரும் நிலையில், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவு கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முறையாகச் செல்வதற்கான சாக்கடை கால்வாய் வசதிகளையும், கழிவுநீரை சேமிப்பதற்குக் கூடுதல் கழிவுநீா்த் தொட்டிகளையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நோயாளிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.