ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

இலக்கிய விருது பெற விண்ணப்பிக்க பழங்குடியினருக்கு ஆட்சியா் அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இலக்கிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image

இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:41 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இலக்கிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூகத்தினரின் கலை, கலாசாரம், இலக்கியம் தொடா்பான படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தை உருவாக்கி, அச்சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளைத் தோ்வு செய்து அவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள படைப்பாளா்கள் இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடா் நல ஆணையரகத்திலும் வேலைநாள்களில் நேரில் சென்று பெற்று விண்ணப்பிக்கலாம்.

அல்லது தமிழக அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.