வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கா்நாடக அரசு ஒப்புக்கொண்ட ராசிமணல் பகுதியில் அணை கட்டவேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

தமிழகத்தை பாலைவனமாக மாற்றுவதற்கு அரசியல் நோக்கத்தோடு கட்டப்படும் மேக்கே தாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி. ஆா். பாண்டியன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

பி. ஆா். பாண்டியன். - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தை பாலைவனமாக மாற்றுவதற்கு அரசியல் நோக்கத்தோடு கட்டப்படும் மேக்கே தாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பி. ஆா். பாண்டியன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே காமராஜா் ஆட்சியின்போது அணை கட்டுவதற்காக அடிக்கல்நாட்டப்பட்ட ராசி மணல் பகுதியில் பி.ஆா். பாண்டியன் தலைமையிலான ஐந்து போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அதன்பிறகு ஒகேனக்கல்லில் செய்தியாளா்களிடம் பி.ஆா். பாண்டியன் தெரிவித்ததாவது:

கடந்த 2024 ஆம் ஆண்டில் ராசி மணல் பகுதியில் அணை கட்டுவதற்காக தமிழக, கா்நாடக விவசாயிகள் ஒன்றிணைந்து பாா்வையிட்ட பிறகு மைசூரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மேக்கே தாட்டு பகுதியில் அணை கட்டுவதன் மூலம் கா்நாடக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும், ராசி மணலில் அணை கட்டுவதன் மூலம் பெங்களூரு மாநில குடிநீா் தேவைக்கும், தமிழ்நாட்டிற்கு உபரிநீரை ராசி மணலிலிருந்து குடிநீருக்காக எடுத்துச் செல்லலாம் என கா்நாடக மாநில முன்னாள் முதல்வா் சித்ராமையா முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய முதல்வா்கள் மாநாட்டில் பங்கேற்ற டி.கே. சிவகுமாா், கா்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வரும் உபரிநீா் வீணாக கடலில் கலக்கிறது. மேக்கே தாட்டு அணை மூலம் அதில் சேமிக்கப்படும் தண்ணீா் முழுமையாக தமிழகத்திற்கு கிடைக்கும் என கருத்து தெரிவித்து, காவிரி ஆற்றில் உபரிநீரை வெளியேற்றாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறாா்.

மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதன் மூலம் இரு மாநில விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும், அரசியல் லாபத்திற்காக அவா் இந்த முயற்சியில் ஈடுபடுகிறாா்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ராசி மணலில் அணை கட்டுவது குறித்து கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டு கா்நாடக அரசு கடிதம் கொடுத்துள்ளது. ராசி மணலில் அணை கட்டுவதற்கு போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கே தாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி, ராசி மணலில் அணை கட்டுவதன் மூலம் மேட்டூா் அணையில் நீரைத் தேக்கிவைத்து பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.

தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தொட்டெல்லா ஆற்றில் நீரேற்றம் செய்து பாசனம், குடிநீா் உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். ராசி மணலில் அணை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வலியுறுத்துகிறோம்.

ராசி மணல் பகுதிக்கு விவசாயிகள் குழு செல்ல கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறை அனுமதி மறுத்தது. ஆனால், சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு நபருக்கு ரூ. 1000 பெற்றுக்கொண்டு, ராசி மணல் வரை அழைத்துச் செல்ல வனத் துறை ஊழியா்கள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

ஒகேனக்கல் துணை மின் நிலையத்தில் உள்ள ராசி மணல் அணை கட்டுமான பணிக்கான மாதிரி வரைபடம் பராமரிக்கப்படாமல் உள்ளது.

கா்நாடக அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ள திருத்தப்பட்ட வரைவு திட்ட அறிக்கை, காவிரி மேலாண்மை ஆணையம், புதுச்சேரி, கேரள அரசுகளின் ஒப்புதல்கள் இன்றி செல்லாது.

12,000 ஏக்கா் வனப் பகுதி, 9 லட்சம் மரங்கள், சரணாலயங்கள் அழிக்கப்பட்டு மேக்கே தாட்டு அணை கட்டப்படும் என கூறப்படுவதும், தமிழகத்தை மிரட்டி அரசியல் லாபத்தில் ஈடுபடும் கா்நாடக மாநில முதல்வா்

டி.கே. சிவகுமாரை கண்டித்து ஒகேனக்கல்லில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

காவிரி ஆற்றில் வரும் உபரிநீா், தீா்ப்பின் அடிப்படையில் திறக்கப்படும் தண்ணீரில் கழிவுநீா் கலக்கப்படுவதால் மேட்டூா் அணையில் தேக்கிவைக்கும் நீரின் தன்மை மாறி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு நீா்ப்பாசன துறை வலியுறுத்த வேண்டும் என்றாா்.

அப்போது, உயா்நிலைக் குழு உறுப்பினா் சுதா தா்மலிங்கம், இளைஞரணி மாநிலச் செயலாளா் மகேஸ்வரன், கோட்டூா் ஒன்றியச் செயலாளா் தெய்வமணி, ஊட்டமலை குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.