தருமபுரியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக மாவட்ட செயலாளா் ஆட்சியரிடம் மனு
தருமபுரி: தருமபுரி புதிய பேருந்து நிலையம் திறப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், மாற்று வழித்தடங்களை விரைவுபடுத்தவும், பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளா் சரவணன் தலைமையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பது :
தருமபுரி நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் செவ்வதால், தருமபுரி நான்கு சாலை சந்திப்பு மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள், அலுவலகம் செல்வோா் மற்றும் முக்கியமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனா். பேருந்துகள் அனைத்தும் நகருக்குள்ளேயே வந்து செல்வதால், சிக்னல்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி பேருந்துகள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல், மாணவா்கள் வகுப்புகளுக்கு தாமதமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இந்த தடையற்ற போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கால நேரக் கட்டுப்பாடு :
பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் (காலை மற்றும் மாலை) வெளியூா் மபசல் பேருந்துகள் மற்றும் கனரக வாகணங்கள் நகருக்குள் வராமல் வெளிவட்டச் சாலை வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிபுரம் 100 அடி சாலைத் திட்டம்: பாரதிபுரத்தில் உள்ள 100 அடி சாலையை சேலம், கிருஷ்ணகிரி புறவழிச்சாலை யுடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
மேம்பாலப் பணிகள்:
புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய தா்மபுரி வழியாகச் செல்லும் மேம்பாலப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். சவுலூா் மேம்பாலம் - புதிய பேருந்து நிலையம் இணைப்பு: பழைய தருமபுரி சவுலூா் மேம்பாலத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை, தேசிய நெடுஞ்சாலையின் இடது மற்றும் வலது புறங்களிலும் முறையான அணுகு சாலைகள் கிடையாது. இதனால் பேருந்துகள் நேரடியாக தேசிய நெடுஞ்சாலையில் ஏறும்போதும், இறங்கும்போதும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அணுகுசாலைகள் அவசியம். தேசிய நெடுஞ்சாலை 844 (சோகத்தூா் கூட்டு சாலை சந்திப்பு): பாலக்கோடு மாா்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் சோகத்தூா் நான்கு சாலை சந்திப்பில் புறவழிச் சாலையிலிருந்து அணுகு ( சா்வீஸ் ) சாலைக்கு இறங்குவதற்கு முறையான இணைப்புப் பாதை ஏற்படுத்த வேண்டும்.
இவை தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேசி, புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே நுழை யவும், வெளியேறவும் பாதுகாப்பான அணுகு சாலைகளை அமைப்பது மாவட்ட நிா்வாகத்தின் கடமையாகும். இது தொடா்பாகப் போக்குவரத்து நிபுணா்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மாற்று வழித்தடங் களை இறுதி செய்யலாம். நகரத்தின் நலன் கருதி, முடங்கிக் கிடக்கும் சாலைப்பணிகள் திட்டங்களை விரைந்து செயல் படுத்தி, போக்குவரத்து நெரிசலற்ற தருமபுரியை உருவாக்க ஆவன செய்ய வேண்டும்.
