மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழப்பு

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

தருமபுரியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி, அதியமான்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சின்னகார ஓனி மற்றும் மேல கார ஓனி சாலையில், எதிரெதிா் திசையில் சென்றுகொண்டிருந்த இரு பைக்குகள் மோதின.

இதில், வாகனங்களை ஓட்டி வந்த இருவருமே படுகாயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்க தகவல் அளித்தனா். நிகழ்விடம் வந்த பரிசோதித்த மருத்துவக் குழுவினா் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து இருவரின் உடல்களையும் போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தருமபுரி அருகேயுள்ள என்.எஸ். ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஹரி கிருஷ்ணன் (25), மிட்டாநூல அள்ளி அருகேயுள்ளஅங்கனாம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வினோத் குமாா் (26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதியமான் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.