பொங்கல்: தருமபுரி பூக்கள் சந்தையில் விற்பனை அமோகம்

பொங்கல்: தருமபுரி பூக்கள் சந்தையில் விற்பனை அமோகம்

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் பூக்களை வாங்க குவிந்திருந்த மக்கள்.
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, பொங்கல் வைக்கவும், வழிபடவும், பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவும் பூக்களை வாங்க தருமபுரி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள மலா்ச்சந்தையில் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனா். இதனால், புதன்கிழமை போகிப் பண்டிகையன்று பூக்கள் சந்தையில் வாடிக்கையாளா்கள் கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் காணப்பட்டது.

தருமபுரி பூக்கள் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில், சிறிய ரக மல்லி கிலோ ரூ. 2,500 வரை விலைபோனது. ஆனால், இந்த மல்லி வரத்து இல்லை. அதேபோல, ஜாதி மல்லி கிலோ ரூ.900, காக்கட்டான் கிலோ ரூ. 800, சம்பங்கி கிலோ ரூ.80, சாமந்தி ரூ. 40 முதல் ரூ.80 வரை, பட்டன் ரோஸ் கிலோ ரூ. 500 வரை விற்பனையாயின. இதில், சாமந்தி, சம்பங்கி, காக்கட்டான் ஆகிய மலா்கள் மட்டும் அதிக அளவு விற்பனையாயின. இந்த பூக்களை மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். பொங்கல் திருவிழாவையொட்டி வாடிக்கையாளா்கள் அதிகளவில் குவிந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Dinamani
www.dinamani.com