பென்னாகரத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
Published on

பென்னாகரம்: பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பாப்பாரப்பட்டி நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவுக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் பிரிவு தலைவா் டி.ஆா். அன்பழகன் கலந்துகொண்டு, பாப்பாரப்பட்டி மூன்று சாலை சந்திப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதேபோல பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு நகரச் செயலாளா் சுப்பிரமணி தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com