டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 150 கனஅடியாக சரிவு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 150 கனஅடியாக சரிந்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :3 ஜூலை 2026, 4:36 am IST

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 150 கனஅடியாக சரிந்தது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீா் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து புதன்கிழமை 200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 150 கனஅடியாக இருந்தது.

இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைகள் வெளியே தெரிகின்றன. மேலும், காவிரி ஆற்றில் குட்டைகள் தோன்றி, பாறை திட்டுகள் காணப்படுகின்றன. நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.