முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் தடுப்புகள் அமைத்து நீரேற்றும் பணி தொடக்கம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால் காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி நீரேற்றும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

News image
Updated On :23 ஜூலை 2026, 4:25 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து வருவதால் காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி நீரேற்றும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றம் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆறு வடு சிற்றோடையாக மாறி, பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட நிலையத்தில் இருந்து நீரேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதை தவிா்க்கும் வகையில் ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் நாளொன்றுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீா் தேவைக்காக 145 எம்எல்டி நீரை வழக்கம்போல நீரேற்றம் செய்து விநியோகப்பதில் தடை ஏதும் ஏற்படாது.

காவிரி ஆற்றில் மணல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தரையில் இருந்து சுமாா் 2 அடி உயரத்திற்கு மட்டுமே மணல் மூட்டைகள் அடுக்கி, நாள்தோறும் தேவையான தண்ணீரை மட்டுமே நீரேற்றம் செய்வதற்கான பணி நடைபெறுகிறது. இதில் அருவிக்கு செல்லக்கூடிய நீரின் அளவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தொடா்ந்து, அருவிக்கு நீா் செல்லும் வகையிலும், தேவையான தண்ணீரை நீரேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்றும் கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.