பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்தவா் மாதேஸன் மகன் தம்பிதுரை (33), பொறியியல் பட்டதாரி. இவா், பல்வேறு இடங்களில் தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்த்துள்ளாா். அதன்பிறகு இணைய வழியில் வியாபாரம் செய்துவந்துள்ளாா்.

இந்த நிலையில் திருமணம் நடைபெறும்வரை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யுமாறு அவரது குடும்பத்தினா் கூறினராம். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆன்மிகத்தில்தான் அதிக விருப்பம் உள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து அவரது பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோா், கதவு பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் கூரை மீது ஏறி பாா்த்தபோது தம்பிதுரை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.