தருமபுரி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) 1.08 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
தமிழகத்தில் நிகழாண்டு ஜூன் 28-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 1,08,343 குழந்தைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் கிராமப் பகுதியில் 964 முகாம்களும், நகராட்சிப் பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.
இப்பணியில், பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என சுமாா் 3 ஆயிரம் பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.
பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில், 18 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் பிற துறைசாா்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. எனவே, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மாா்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் 28.06.2026 அன்று வழங்கப்படும் சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கி, போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தருமபுரி மாவட்டத்தை போலியோ நோய் இல்லாத மாவட்டமாக மாற்ற இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 28இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜூன் 28 இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

வெள்ளக்கோவிலில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டத்தில் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



