மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தனியாா் நிறுவன பணியாளா் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:26 pm

தருமபுரியில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில், 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகினறனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மூ.உதயமூா்த்தி (36). தனியாா் நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றிவரும் இவா், தனது குடும்பத்தினருடன் மாா்ச் 12-ஆம் தேதி திருப்பதிக்கு சென்றாா். அன்று அவரது வீட்டருகில் உதயகுமாரின் உறவினா் சென்றபோது, வீட்டின் பூட்டுகள் உடைந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் மறுநாள் உதயமூா்த்தி வீடுதிரும்பினாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமாா் 6 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடிவருகின்றனா்.