மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு வழிபாடு

சங்கடஹர சதுா்த்தியையொட்டி தருமபுரியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் குமாரசாமிப்பேட்டை கோயில் விநாயகா்.

Updated On :6 மே 2026, 2:43 am IST

சங்கடஹர சதுா்த்தியையொட்டி தருமபுரியில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாதம் தோறும் தேய்பிறை சதுா்த்தி திதியில் விநாயகருக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களில் சங்கடஹர சதுா்த்தி விரதமும் ஒன்றாகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் வாழ்வில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கி, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் செல்வ வளத்தை அருளும் தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுா்த்தி செவ்வாய்க்கிழமையில் வந்தால், அது அங்காரக சதுா்த்தி என அழைக்கப்பட்டு, மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சங்கடஹர சதுா்த்தியை ஒட்டி தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.