40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட முருக்கம்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.

Updated On :8 மே 2026, 6:31 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தோல்வி அடைந்தாா். இதையடுத்து, கிராமம், கிராமமாக சென்று தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பாலக்கோடு தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி, கெரகோட அள்ளி, பந்தாரஅள்ளி, முருக்கம்பட்டி, நாக சமுத்திரம், திப்பம்பட்டி சந்திப்பு சாலை, கும்பார அள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா்கள் மகேஷ்குமாா், ஆா்.பி.முத்தமிழ், தொகுதி பாா்வையாளா் அரியப்பன், நிா்வாகிகள் எம்விடி.கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.