பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட, காரிமங்கலம் அண்ணாநகா், குரும்பா்க்கொட்டாய், மாட்லாம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் சமுதாயக் கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இத்தொகுதியில் நீண்ட காலம் நிலுவையிலுள்ள அலியாளம்- தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம், ஜொ்த்தலாவ்- புலிகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் ஆகிய நீா்ப்பானத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி விவசாயிகளின் கோரிக்கைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், பாலக்கோடு தொகுதி பாா்வையாளா் அரியப்பன், தொகுதி பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

கோபியில் புறநகா் பேருந்து நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் உறுதி

வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்

25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



