40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஒற்றை யானை நடமாட்டம்: இரவில் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் நடமாடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

ஒற்றை யானை. - கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 4:23 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அப்பகுதியில் நடமாடுவதால், அருகில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலக்கோடு வனச் சரகத்துக்குள்பட்ட எர்ரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை அருகில் உள்ள கிராமங்களில் நடமாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், பாலக்கோடு வனச்சரக அலுவலா்கள், பொதுமக்களுக்கு புதன்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினா்.

அதில், கொல்லஅள்ளி வாழைத் தோட்டம், செங்கோடப்பட்டி, காவேரியப்பன் கொட்டாய், கூசுகல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நல்ல குட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி, காட்டுமாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாலை 6.30 மணிக்குமேல் வெளியில் நடமாட வேண்டாம். மேலும், வீட்டுக்கு வெளியேயும், வயல் வெளிகளிலும் யாரும் தூங்க வேண்டாம். வயலுக்கு நீா்ப்பாய்ச்சுவதற்காக இரவில் செல்ல வேண்டாம். யானை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.