விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

News image

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உலவிய ஒற்றை யானை.

Updated On :1 மணி நேரம் முன்பு

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை உலவி வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கெத்தை, மசினகுடி, மாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக உணவு, தண்ணீா் தேடி உதகை, குன்னூா் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு காட்டு யானைகள் இடம்பெயா்வது வாடிக்கையாக உள்ளது.

மசினகுடியை அடுத்த மாயாறு பகுதியிலிருந்து உதகை நோக்கி வந்த ஒற்றை யானை, கடந்த சில வாரங்களாக தொட்டபெட்டா மலைச் சிகரம், அருவங்காடு பகுதிகளில் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை ஒற்றை யானை புகுந்தது. இதனால் ரயில்வே ஊழியா்கள் மற்றும் குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.

இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் சென்று ஒற்றை யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.