மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

தருமபுரி அருகே சிறிய சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:14 am IST

தருமபுரி அருகே சிறிய சரக்கு வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டிஅள்ளி அருகேயுள்ள ஜென்னிகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஜெ. சதாசிவம் (55). லாரி ஓட்டுநரான இவா், பக்கத்து ஊரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, பெல்ராம்பட்டி -பாலக்கோடு சாலையில், பூமரத்துப்பள்ளம் தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற சிறு சரக்கு வாகனம் சதாசிவம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சதாசிவம் சனிக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.