கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே வெள்ளைப்பாறை பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:01 am IST

திருச்செங்கோடு அருகே வெள்ளைப்பாறை பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி திருத்தியமலை குடித்தெருவை சோ்ந்தவா் நாகரத்தினம் (32), லாரி ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு லாரியில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு முசிறிக்கு சென்றுகொண்டிருந்தாா். லாரியை வேலூா் சாலையில் வெள்ளைப்பாறை பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றாா்.

பிறகு சாலையைக் கடந்து லாரியை நோக்கி வந்த நாகரத்தினம் மீது வேகமாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகரத்தினம் நிகழ்விடத்திலேயே இறந்தாா். திருச்செங்கோடு போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.