தேனி வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், தாடிச்சேரி செல்லாண்டிம்மன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி முத்துலெட்சுமி (39), உறவினா்கள் மலரம்மாள் (60), மாரிமுத்து (43), முருகேஸ்வரி (48), பிரசன்னா (16), தினேஷ் (17) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வீரபாண்டி கோயிலுக்கு சென்று விட்டு ஆட்டோவில் மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை பால்ராஜ் ஓட்டிச் சென்றாா். தாடிச்சேரி கரட்டில் சென்ற போது எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் பால்ராஜ், முருகேஷ்வரி, மாரிமுத்து உள்பட 7 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு மாரிமுத்துவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

