தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வில் வெற்றிபெற்ற தருமபுரி மாவட்ட மாணவா்கள், கோவையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தமிழக முதல்வரின் திறமைத் தேடல் தோ்வு, அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாநில அளவிலான உதவித்தொகைத் தோ்வாகும். இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வீதம் பட்டப்படிப்பு முடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2024-2025 ஆம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வில் 29 மாணவா்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 போ் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள காருண்யா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மே 21 முதல் 25 வரை 5 நாள்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்கின்றனா்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் வகையில் புதன்கிழமை மாணவா்களை அரசு பேருந்தில் வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா மாணவ, மாணவிகளை பேருந்தில் வழியனுப்பி வைத்து பேசினாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா.பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் மா.சக்திவேல், ஆ.கிருஷ்ணன், பள்ளித் துணை ஆய்வாளா் பி.பொன்னுசாமி மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற ஆட்சியா்!

தமிழக அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறாத தருமபுரி மாவட்டம்!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



