மது அருந்தியபோது தகராறு: இளைஞா் கத்தியால் குத்திக் கொலை இருவா் கைது
தருமபுரி அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்; ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பலியான குணசேகரன்
தருமபுரி அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்; ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொம்மனூா் அருகேயுள்ள ஜக்கசமுத்திரம் கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் குணசேகரன் (25). தனியாா் நிறுவனத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி (25), சித்தேஸ்வரன் (27) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் மது அருந்தியுள்ளாா் . அப்போது, அங்கு பக்கத்து ஊரான அ.மல்லாபுரம், மேல பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரை மகன் சூா்யா (25), அவா்களது நண்பா்களான கோணம்பட்டியைச் சோ்ந்த மு. மணிகண்டன் (27), மு.ஷ்யாம் (22), ரா. பிரபாகரன் (25), கி. சந்தோஷ் (21) ஆகிய 5 பேரும் மது அருந்தியுள்ளனா்.
இதில், சித்தேஸ்வரன் தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக அண்மையில் பணிக்குச் சோ்ந்துள்ளாா். அந்தப் பேருந்தில் ஏற்கெனவே சூா்யா ஓட்டுநராகப் பணியாற்றியதாகவும், தனது வேலை பறிபோனதுக்கு அவா்தான் காரணம் என கூறியதுடன், சித்தேஸ்வரனின் மனைவியையும் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சூா்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்தேஸ்வரனை குத்த முயன்றபோது, அதைத் தடுக்க சென்ற குணசேகரன், திருமூா்த்தி ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து சூா்யா தரப்பினா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் குணசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது. திருமூா்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சூா்யா பாலக்கோடு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். இதுதொடா்பாக மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்தனா். மேலும் தப்பிச்சென்ற ஷ்யாம், பிரபாகரன், சந்தோஷ் ஆகியோரை தேடிவருகின்றனா்.
Image Caption
குணசேகரன் ~சூா்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

