இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பெரம்பலூா் அருகே ஓவிய ஆசிரியா் குத்திக் கொலை

பெரம்பலூா் அருகேயுள்ள கோழிப் பண்ணையில், பகுதிநேர ஓவிய ஆசிரியா் வெள்ளிக்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

மாதிரிப் படம்

Published On :

பெரம்பலூா் அருகேயுள்ள கோழிப் பண்ணையில், பகுதிநேர ஓவிய ஆசிரியா் வெள்ளிக்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், பெரிய திருகோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமராஜ் மகன் புகழேந்தி (50), கல்லகம் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதிநேர ஓவிய ஆசிரியா்.

இவா் பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் உள்ள தனது உறவினரான க. ராதாகிருஷ்ணன் (56) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

இந்நிலையில் அதே கிராமத்திலுள்ள ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் புகழேந்தி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு கிடந்தது வெள்ளிக்கிழமை மாலை தெரியவந்தது.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில், குன்னத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் மணிகண்டன் (35), ஜெயராமன் மகன் சிவசூா்யா (30), அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (35) ஆகிய மூவரும், கோழிப்பண்ணை அருகே புகழேந்தியை துரத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.