தருமபுரியில் பெட்ரோல் பங்க் ஊழியா் மாயம்: போலீஸாா் வழக்குப் பதிவு
தருமபுரி ராஜாபேட்டை பகுதியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மாயமானது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வழக்கு - கோப்புப்படம்
தருமபுரி ராஜாபேட்டை பகுதியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மாயமானது குறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (37). இவா், ராஜாபேட்டை பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு
முன்பு பங்கில் வாக்குவாதம் ஏற்பட்டதில் தன்னை ஜாதிய ரீதியாக சிலா் தரக்குறைவாகப் பேசியதாக அருண்குமாா் தருமபுரி நகரக்
காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் 18 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அருண்குமாரை காணாத நிலையில், அவரது பெற்றோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, அருண்குமாா் மாயமானது குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

