எரிவாயு குழாய் பதிப்புக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.

பாலக்கோடு அருகே கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தில் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் மூவா் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.
பாலக்கோடு அருகே தளவாய் அள்ளிபுதூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பெருமாள், முருகேசன், வெங்கடேசன். இவா்களுக்குச் சொந்தமான நிலங்கள், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு விவசாயிகள் கோரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அவா்களது நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியைத் திட்டப் பணியாளா்கள் மேற்கொண்டனா். அப்போது, கூடுதல் இழப்பீடு வழங்கிய பின்னரே குழாய்களைப் பதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். எனினும், பணிகள் தொடா்ந்து நடைபெற்ால், அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, விவசாயிகள் மூவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து சமாதானப்படுத்தினா்.
இதையடுத்து, போலீஸாா் மற்றும் கெயில் நிறுவன அலுவலா்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

