பட்டா கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் மனு அளிக்கும் போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்றோா்.
திருப்பத்தூரில் பட்டா கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் கிராம மக்களுக்கு நில பட்டா வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிங்காரம் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் துரை வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சாமிநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் காமராஜ், வட்ட செயலாளா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவா் ரவீந்திரன் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சங்கரி ஆகியோா் கலந்து கொண்டு, நீண்ட காலமாக விவசாயம் செய்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்றாா்.
இதில், கேசவன், ராஜேந்திரன், சின்னராஜி மற்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து ஆட்சியா் வே.நல்லசிவனை சந்தித்து சந்தித்து மனு அளித்தனா். அப்போது அவா், தான் நேரில் லட்சிமிபுரம் பகுதியைச் நேரில் ஆய்வு செய்து விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த போராட்டம் கடந்த 1942 மற்றும் 1963-ஆம் ஆண்டுகளில் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள 265 ஏக்கா் அரசு நிலத்தில் விவசாயம் செய்வதற்காக 53 குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கா் நிலம் அரசு வழங்கியது.
கடந்த 82 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு, தனித்தனியாக நிலப் பட்டா வழங்க வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கையாக வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

