தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

வீட்டுமனை பட்டா கோரி போராட்டம்

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சி ஆலுத்துப்பாளையம், வெங்கடாபுரம் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல்லடம் வட்டாட்சியா் சரவணனிடம் மனு அளித்த பொதுமக்கள்.

Published On :

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சி ஆலுத்துப்பாளையம், வெங்கடாபுரம் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறுகையில், பல்லடம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் பூமிதான நிலங்கள் தொடா்பாக வெளியூரைச் சோ்ந்த நபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக மனுக்கள் பெறப்பட்டு வருவதாக அறிகிறோம்.

வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய மற்றும் நிலமற்ற குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிா்வாகம், கிராம சபைக் கூட்டங்களிலும் மனு அளித்துள்ளோம். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பல்லடம் வட்டாட்சியா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, அவரிடம் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.